Thursday, March 25, 2010

பேருந்தில் பெங்களூர் வரும் புதியவர்களுக்கு

முன்பு மெஜெஸ்டிக் என்ற ஒரு பேருந்து நிலையம் மட்டுமே இருந்தது.தற்போது மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.விரைவு சொகுசு போக்குவரத்துகழக பேருந்துகள் சாந்தி நகர் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இயக்கபடுகிறது.
சொகுசு அல்லாத சாதாரண பேருந்துகள் மைசூர் சாலை ஸேட்லைட் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இயக்கபடுகிறது.இது தவிர தமிழ்நாட்டிலிருந்து பெங்களூர் வரும் சில பேருந்துகள் மெஜெஸ்டிக் பேருந்து நிலையத்தில் எங்காவது ஒரு மூலையில் இறக்கிவிடுகின்றனர்.இன்னும் சில பேருந்துகள் அவர்கள் பங்கிற்கு சிட்டி மார்க்கெட் என்னும் நிலையத்தில் ஓட்டுனருக்கு சவுரியமான இடத்தில்இறக்கி விடுவார்கள்.திருச்சி,சேலம்,தருமபுரி,கிருஷ்ணகிரி,ஹோசூர் போன்ற ஊரிலிருந்து வருபவர்கள் நடத்துனரிடம் கேட்டுவிட்டு ஏறுங்கள்.இது உங்களை அழைக்க வருபவர்க்கு எளிதாக அமையும்.
இதே போல் பெங்களுரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவதற்கு விரைவு பேருந்துக்கு முன்பதிவு செய்தவர்கள் சேட்லைட் பேருந்து நிலையத்தில் காத்திருந்து பேருந்து வரவில்லைஎன விசாரித்த பிறகு கடைசி நேரத்தில் பேருந்தை தவற விடுவதும் ,நேரம் இருப்பவர்கள் ஆட்டோ பிடித்து சாந்தி நகர் பேருந்து நிலையம் செல்வதும் கஷ்டமான நிகழ்வாய் இருந்தது.
ஆகவே தீர விசாரித்து இனிமையான பயணத்தை தொடருங்கள்.

மெஜெஸ்டிக் - சேட்லைட் சிவப்பு நிற (மினி பஸ்) சிற்றுந்து சேவை முழு தினமும் உள்ளது.

No comments:

Post a Comment